அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி...படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அரசு பேருந்தில் பயணம் செய்த சென்ற பள்ளி மாணவி தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி...படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில்  வசித்து வருபவர் தாமோதரன், இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பானுப்பிரியா, ஓசூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தினந்தோறும் வீட்டிலிருந்து ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் மாணவி பானுப்பிரியா இன்று ஆட்டோ  பழுது காரணமாக அரசு பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்றுள்ளார். அரசுப்பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மாணவி பானுப்பிரியா படிக்கட்டில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அரசு பேருந்து அந்த பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி கரையோரத்தில் உள்ள ஒரு வளைவில் சென்றபோது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த மாணவி பானுப்பிரியா எதிர்பாராத விதமாக தவிறி விழுத்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைகண்ட அங்கிருந்தவர்கள் பானுப்பிரியாவை உடனடியாக மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓசூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com