மாணவர்களுக்காக பயற்சி மையத்திற்கு சொந்த வீட்டை அர்ப்பணித்த விஞ்ஞானி

மாணவர்களுக்காக பயற்சி மையத்திற்கு சொந்த வீட்டை அர்ப்பணித்த விஞ்ஞானி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் மணி இவர் சிறுவயதில் குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றவர் தொடர்ந்து பயின்று விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | கோரமண்டல் ரயில் தான் விபத்திற்கு காரணம்" இரயில்வே உயரதிகாரி விளக்கம்!

அமெரிக்காவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தான் படித்த பள்ளிக்கும் தனது சொந்த ஊரான பல பாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என தான் படித்து வளர்ந்த வீட்டினை மாணவர்களுக்கு பயிற்சி மையமாக மாற்றி உள்ளார் இந்த வீட்டினை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. சுமார் 35 லட்சம் மதிப்பிலான வீட்டினை மாணவர்கள் பயிற்சி மையமாக தங்கி பயிலவும் அதற்காக ஊக்குவிப்பதற்கு முன்னால் ஆசிரியர்கள் அந்த இல்லத்திற்கு வந்து செல்லும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் இதனை ஏழை எளிய மாணவ மாணவிகள் பயின்று முன்னேற்றம் காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பயிற்சி மையம் திறப்பு விழா  நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.