விரைவில் உருவாகிறது... பிராமணர்களுக்கென்று தனிக் கட்சி!

விரைவில் உருவாகிறது... பிராமணர்களுக்கென்று தனிக் கட்சி!
Published on
Updated on
1 min read

பிராமணர்களுக்கென்று தனிக்கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு செய்தித்தாள் நிறுவனர் இராமசந்திர ஆதித்தனாரின் 89வது பிறந்தநாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று காலை நடைபெற்றது. அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அறவோர் முன்னேற்ற கழகம் என பிராமணர்களுக்காக தனி கட்சி தொடங்கி உள்ளதாகவும், ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், தமிழக பாஜக வளர வேண்டும் என்பதற்காக கருத்துகளை நான் முன் வைக்கிறேன் எனவும் 10 ஆண்டுகளுக்கு மேல் மோடியின் நண்பராக இருக்கிறேன் என்கூறிய அவர், பாத யாத்திரைக்காக இந்தியாவிலே மிகப்பெரிய கேரவனை பயன்படுத்துபவர் அண்ணாமலை என்றும்  தன்னை வளர்த்து கொள்வதற்காக கட்சியை பயன்படுத்தி கொள்வதை தொண்டர் யாராலும் சகித்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட அவர், அனைவரையும் வேண்டாம் என்று சொன்னால் தனியாக தான் நிற்க வேண்டும் என தெரிவித்தார். எப்போதும் ஊழலை பற்றி மட்டுமே பேசினால் பயனளிக்காது என தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும் ஆனால் அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தால் அதில் தமிழ்நாட்டின் பங்கு கொஞ்சம் கூட இருக்காது என விமர்சித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் அண்ணாமலையால் அதிமுக அடிமட்ட தொண்டரின் ஒரு ஓட்டு கூட பாஜகவிற்கு கிடைக்காது என பேசிய எஸ் வி சேகர், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com