அப்பாவின் உற்ற நண்பருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் மகன்..!

அப்பாவின் உற்ற நண்பருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் மகன்..!
Published on
Updated on
2 min read

நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டமாக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக தலைமை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. நேற்றைய தினம் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு புகைப்பட கண்காட்சி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டமாக சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கருணாநிதியின் உற்ற நண்பர்

தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பங்காற்றிய க. அன்பழகன் பேராசிரியராக, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உற்ற நண்பராக உடன் இருந்து பயணித்த பேராசிரியர் அன்பழகனை கௌரவிக்கும் வகையில் சிறப்பு புகைப்படம் கண்காட்சி.

அனுமதி இலவசம்

பேராசிரியர் அன்பழகனின் ஆரம்ப வாழ்க்கை முதல் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து மறைந்தது வரை அவரது வாழ்க்கை பயணங்கள் புகைப்பட கண்காட்சிகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இன்று (17.12.2022) தொடங்கிய கண்காட்சி திங்கட்கிழமை (19.12.2022 ) வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை புகைப்பட கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

புகைப்படத்தாரர் கோவை சுப்பு பேட்டி

இந்த புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள புகைப்படத்தாரர் கோவை சுப்பு பேசுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தலின் படி பேராசிரியர் க.அன்பழகனுக்கு சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 35 வருடமாக மு.க ஸ்டாலினுடன் இருப்பதால் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, இந்நிலையில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுடைய 720 புகைப்படங்கள் இந்த சிறப்பு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 40 லட்சம் புகைப்படங்கள் இருக்கிறது, அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது சிறப்பு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்று கோவை சுப்பு தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com