அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற, "விவசாயிகளுக்கென தனி இயங்குதளம்"!

அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற, "விவசாயிகளுக்கென தனி இயங்குதளம்"!
Published on
Updated on
1 min read

விவசாயிகளையும் அரசையும் இணைக்கும் வகையில் ஒற்றைச் சாளர இணையதளத்தை உருவாக்கி தமிழக அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில்  (GRAINS) எனும் புதிய இயங்குதளத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை உருவாக்கியுள்ளது. இத்தளத்தின் மூலம் பயிர்க்கடன், நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கை பேரிடர் நிவாரணம் என இனி எதற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்  விவசாயிகளின் ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து கணினிமயமாக்கி இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு துறைகளில் திட்டப் பயன்களை பெற தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாவதை தவிர்க்க தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் இதன் மூலம் அரசின் பயன்கள் சரியான பயனாளர்களை சென்றடையவும், விவசாயிகளின் விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பதிவு செய்யும் வசதி இருப்பதால் அரசுக்கும் விவசாயிகளுக்குமான இடைவெளி குறைய இணையதளம் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com