தமிழ்நாடு
இளைஞர் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை...ரயில்வே போலீசார் விசாரணை!
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ரயில்வே கேட் அருகே இன்று காலை கும்பகோணம் நோக்கி வந்த பயணிகள் ரயிலில் அடிபட்டு 25 வயதுடைய அரித்துவாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் தான் ஓட்டி வந்த இருசக்கர மோட்டார் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, பின்னர் ரயில் முன் பாய்ந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.