6-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய இளைஞர்..! தாய் மற்றும் சிறுமியை வீட்டில் சிறைவைத்த கொடூரம்..!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே 6-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

6-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய இளைஞர்..! தாய் மற்றும் சிறுமியை வீட்டில் சிறைவைத்த கொடூரம்..!

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் தேங்காய்பட்டணத்தில் இருந்து பேசுவதாகவும் 6-ம் வகுப்பு படிக்கும் 11-வயதான சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தாய் மற்றும் சிறுமியை வீட்டிலேயே வைத்து அந்த வாலிபர் மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் மற்றும் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.  அப்போது  கணவரை  பிரிந்து மகன் மகளுடன் வசித்து வந்த அந்த பெண்ணுக்கு  செய்யதலி  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  

இருவரும் சேர்ந்து வாழ்வோம் என அந்த இளைஞர் கூறியதை நம்பி அந்த பெண் செய்யதலிக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்ததோடு தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில்  செய்யதலியின் தம்பி ரியாஸ் அவர்களுடன் இருந்த நிலையில் வீட்டில் இருந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.