காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்தவா் கணேசன். பழைய இரும்பு பொருட்கள்  வியாபாரம்  செய்து வரும் இவர், மனநலம் பாதிக்கப்பட்ட உறவுகார பெண்ணான சிவகாமியை காதலித்து மணந்துள்ளார்.

இந்நிலையில்,  கணேசன் வியாபாரம்  செய்வதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிவகாமி  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினா் சிவகாமி உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com