இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுகிறதா? அப்டேட் விரைவில்...!

இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுகிறதா? அப்டேட் விரைவில்...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வரும் 27 ஆம் தேதி முடிவை அறிவிப்பதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இதையும் படிக்க : மாதந்தோறும் மின்கட்டணம் உயர்வு...மத்திய அரசின் திட்டத்தை திமுக ஏற்காது...முற்றிலும் பொய்யானது!

விரைவில் அறிவிப்பு வெளியாகும் :

ஆலோசனைக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முறை இடைத்தேர்தலில் சாதிக்க முடியும் என்றும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று உறுதியாக இருப்பதாகவும் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே, வரும் ஜனவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.