விதிகளை மீறிய ஏ.டி.ஜி.பி-யின் வாகனம்....! அபராதம் விதித்த சென்னை காவல்துறை..!

விதிகளை மீறிய ஏ.டி.ஜி.பி-யின் வாகனம்....! அபராதம் விதித்த சென்னை காவல்துறை..!
Published on
Updated on
1 min read

தமிழக காவல்துறையில் ஏ.டி.ஜி.பி அந்தஸ்திலுள்ள காவல்துறை அதிகாரி ஒருவரின் வாகனத்தை ஓட்டிவந்த காவலருக்கு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு சென்னை காவல்துறையிடம் முறையிடப்பட்டது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, அந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு விதிமீறல்களுக்காக அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏ.டி.ஜி.பி அந்தஸ்து உடைய அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் 3 ஸ்டார் பதித்த வாகனம் ஒன்று ஒருவழிப்பாதையில் செல்லும் காட்சியை, பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதுகுறித்து சென்னை காவல்துறையிடம் முறையிட்டிருந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில், புகாரில் குறிப்பிடப்பட்ட ஏ.டி.ஜி.பி அந்தஸ்துடையவரின் வாகனத்தை ஓட்டி வந்த காவலருக்கு ஒருவழிப்பாதையில் சென்றதற்காக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.ஜி.பி அந்தஸ்து அதிகாரியின் வாகனத்தை ஓட்டிய காவலருக்கு சென்னை காவல்துறை மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகார் அளித்த நபரின் பதிவுக்கு கீழ் காவலருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தின் செலானை பகிர்ந்து அதன் விவரங்களை குறிப்பிட்டு சென்னை காவல்துறை சார்பில் புகார் அளித்த நபருக்கு முறையாக பதிலளிக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com