அ.தி.மு.க ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி கொண்டது - டிடிவி தினகரன் விமர்சனம்
சென்னை வானகரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது

அ.தி.மு.க ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி கொண்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறார்.
அமமுக பொதுக்குழு கூட்டம்
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தீர்மானங்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, பெரியார் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் சிறப்புடன் செயலாற்றி வரும் டி. டி. வி தினகரன் தலைமையில் தொடர்ந்து பயணிப்போம்.
ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றதற்கும் எதிர்வரும் தேர்தலுக்கு ஆயத்தமாகும் பொதுச் செயலாளருக்கு நன்றி. அம்மா உணவகங்கள் போன்ற திட்டங்களை முடக்குவதற்கு கண்டனம், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை, பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்து இருக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்,
பேரறிவாளன் விடுதலையை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற ஆறு தமிழர்களையும் விடுவிக்க கோரிக்கை, வீட்டு வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் அதற்காக உழைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள் நன்றிகள்,காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தம்
இதன் பின்னர் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், வருக்காலத்தில் அமமுக தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும் என்றார். அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளதாகவும் பதவி வெறி, மற்றும் ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் அ.தி.மு.க சிக்கி கொண்டுள்ளதாகவும் டிடிவி சாடினார். எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து துரோகம் செய்து கொண்டே வருவதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.