அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும், சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை, நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடித்து விடுவதாக, அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.