அதிமுக மா.செ.கூட்டம்; பாஜக கூட்டணி பற்றி விவாதிக்க வாய்ப்பு!

பாஜக - அதிமுக இடையே கருத்து மோதல் தொடா்ந்து வரும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளா்கள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதல் இரு கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதிமுகவுக்கு எதிராக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக வைத்த கோரிக்கையை பாஜக மேலிடம் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனை அரசியல் நாடகம் என பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக எம். பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: மோசடி வழக்கில் வழக்கறிஞரை கைது செய்ய காபிபோசா சட்டத்தின் கீழ் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்