மின் கட்டண உயர்வு: போட்டி போட்டுக்கொண்டு போராட்டத்தை அறிவித்த அதிமுக, பாஜக!!

மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அதிமுகவும் பாஜகவும் போட்டி போட்டுக்கொண்டு போராட்டத்தை அறிவித்துள்ளன.

மின் கட்டண உயர்வு:  போட்டி போட்டுக்கொண்டு போராட்டத்தை அறிவித்த அதிமுக, பாஜக!!

மின் கட்டணம் உயர்வு: பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்:

மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, 55 ரூபாய் முதல் ஆயிரத்து 130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்கிறது. இந்த மின்கட்டண உயர்வு குறித்து, வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக போராட்டம்:

மின் கட்டண உயர்வை கண்டித்து, வரும் 25ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்:

இதேபோல், மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி வரும் 23ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.