கடலுக்கு அடியில் அதிமுக மாநாட்டு பேனர்!!

கடலுக்கு அடியில் அதிமுக மாநாட்டு பேனர்!!
Published on
Updated on
1 min read

அதிமுக எழுச்சி மாநாட்டு பேனரை  கடலூரில் கடலுக்கு  அடியில் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெற இருக்கிறது.

இதற்காக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாநாட்டை பிரபலப்படுத்துவதற்காக கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் பிரித்வி ஆழ்கடல் வீரர்கள் மூலம் மாநாட்டு பேனரை வைத்து விளம்பரப்படுத்தியுள்ளார்.

ஆழ்கடல் வீரர்கள் கடல் அடியில் அதிமுக மாநாடு குறித்து பேனரை வைத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com