நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது எப்படி..? 24-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து  ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது எப்படி..? 24-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

தமிழகத் தில் தற்போது 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத் தி முடிக்க வேண்டும் என்று உச்சநீ திமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத் தி வருகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ. தி.மு.க. தலைமை அலுவலகத் தில் வரும் 24-ம் தே தி காலை 10 மணிக்கு அ. தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத் தில் தேர்தலுக்கான திட்டமிடல், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.