இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இருப்பது டம்மி போஸ்ட்... அ.தி.மு.க. தனது ஆன்மாவை இழந்து விட்டது..  நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்...

ஆதாய சூதாடிகளின் கையில் அதிகாரத் தரகர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டு அந்தக் கட்சி தனது ஆன்மாவை இழந்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ளார் நாஞ்சில் சம்பத்.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இருப்பது டம்மி போஸ்ட்... அ.தி.மு.க. தனது ஆன்மாவை இழந்து விட்டது..  நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான இன்று மசூதியை மீட்டெடுப்போம் என்ற கண்டன போராட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து அவர்,

திராவிட இயக்கம் அண்ணா தி.மு.க., தி.மு.க., தி.க., அப்படின்னு சொன்ன பொதுச்செயலாளர் பதவிதான் திராவிட இயக்கத்தினுடைய பேட்டன். ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர்  என்ற ஒன்றே கிடையாது. இல்லாத பதவிக்கு யாரும் போட்டியிட மாட்டார்கள். இது டெல்லியில் தேர்தல் ஆணையமும் பிஜேபியும் அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த எடுபிடிகளுக்கு கொடுத்திருக்கிற சன்மானம். ஒருங்கிணைப்பாளர் பதவியை அண்ணா திமுக தொண்டர்கள் விரும்பவில்லை அதனால் தான் போட்டியிடவில்லை என்றார்.

மேலும், அண்ணா திமுக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு அமைப்பு. இன்றைக்கு ஆதாய சூதாடிகள், அதிகாரத் தரகர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டு அந்த கட்சி தன்னுடைய ஆன்மாவை இழந்து விட்டது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி டம்மி போஸ்ட். இதை யாரும் மதிக்கவே மாட்டாங்க. இது ஒரு நாள் செய்தி தானே தவிர, இதற்கு பின்னால் எந்த சரித்திரம் இருப்பதாக நான் கருதவில்லை என்றார்.