முதலமைச்சர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

முதலமைச்சர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

அதிமு க யாரு க் கும் அடிமை இல்லை என அ க் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமா க தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நி கழ்ச்சியில் திமு க, பாம க, விசி க உள்ளிட்ட பல்வேறு மாற்று க் கட்சியில் இருந்து வில கிய ஆயிரத்து க் கும் மேற்பட்டோர் அதிமு க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமு கவில் இணைந்தனர். அதன் பின் செய்தியாளர் களிடம் பேசிய அவர், ம க் கள் பிரச்னையை அரசிடம் எடுத்துச் செல்லும் பிரதான எதிர் க் கட்சியா க அதிமு க உள்ளது என கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங் களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை அதிமு கவின் இல க் கு என குறிப்பிட்டார். 

இதையும் படி க் க : கொட்டும் மழையிலும் திரண்ட மீன்பிரியர் கள் ; எதிர்பார்த்த அளவிற் கு மீன் கிடைத்ததால் மீனவர் கள் ம கிழ்ச்சி!

ரவுடி போல பேசும் முதலமைச்சரால் தமிழ்நாட்டில் ரவுடி கள் தலைதூ க் குவார் கள் என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, த குதி அறிந்து, பொறுப்புடன் கருத்து க் களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவி க் க வேண்டும் என அறிவுரை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊழல் வழ க் கில் கைதான செந்தில் பாலாஜி அமைச்சரா க தொடர்ந்தால், ம க் கள் எப்படி அரசியலை மதிப்பார் கள் என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் 25 இடங் களில் பாஜ க வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.