அர்ஜெண்டினாவின் வெற்றியை முன்பே கணித்த ஜெயக்குமார்...அதிமுக தான் உண்மையான...சொன்னது என்ன?

அர்ஜெண்டினாவின் வெற்றியை முன்பே கணித்த ஜெயக்குமார்...அதிமுக தான் உண்மையான...சொன்னது என்ன?

அதிமுக தான் உண்மையான மெர்சி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர்:

பிஃபாவின் 22 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் எதிர் எதிரே களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் லயோனஸ் மெஸ்சியின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால், அவரது ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும் கண்டுகளித்து வந்தனர்.

கோப்பையை தட்டிச் சென்ற அர்ஜெண்டினா:

அதன்படி, இறுதி தொடரில் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜெண்டினா அணி, கடுமையாக போராடி விளையாடிய பிரான்சு அணியை வீழ்த்தி பிஃபா 22வது கால்பந்து உலகக்கோப்பையை தட்டி சென்றது. 

இதையும் படிக்க: கரூரில் நடந்தது ஜனநாயக படுகொலை... குற்றம் சாட்டும் ஜெயக்குமார்...!

முன்பே கணித்த ஜெயக்குமார்:

இந்நிலையில், சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பிஃபா 22வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பிஃபா 22வது உலகக்கோப்பை கால்பந்து தொடரை பொறுத்தவரையில், தான் முன்பே கணித்தது போலவே மெர்சியின் தலைமையிலான அர்ஜெண்டினா அணி தான் வெற்றி பெற்றதாகவும், பிரான்சு அணி கடுமையாக போராடியதாகவும், அதிமுக தான் உண்மையான மெர்சி என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.