மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உள்பட 300 பேர் திமுகவில் இணைந்தனர்...

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.கஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உள்பட 300 பேர் திமுகவில் இணைந்தனர்...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுக் கட்சியினர், திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கன்னியாகுமரி,  இராமநாதபுரம், தஞ்சை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 
2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நடராஜன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக சார்பில் சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட ஆனந்தன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனும் திமுகவில் இணைந்துள்ளார்.
இதேபோல் தஞ்சை மற்றும் ராமாநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக மாவட்ட பொறுப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த மாற்று கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், புத்தகம் மற்றும் திமுக கரை வேட்டிகளை பரிசளித்தார். மேலும் அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி திமுகவில் இணைத்துக் கொண்டார்.