பொதுக்குழு குறித்த அதிமுகவின் இன்றைய தீர்மானக் கூட்டத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் பங்கேற்பு ?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பாதியிலேயே நின்ற பொதுக்குழுவின் தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

பொதுக்குழு குறித்த அதிமுகவின் இன்றைய தீர்மானக் கூட்டத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் பங்கேற்பு ?

வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு அதற்கான தீர்மானங்களுக்கான கூட்டம் நேற்று திட்டமிடப்பட்டிருந்தது. கோஷங்கள், போஸ்டர்கள் மூலம் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றைய கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் அதிகரித்தது. இதில் சிக்கி பலருக்கு காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தங்களது ஆதரவாளர்களுடன் இபிஎஸ்-ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி ஆதரவு திரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் தீர்மானக்கூட்டம் முறையாக நடப்பதில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, இபிஎஸ்-ம் பாதியிலேயே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தீர்மானங்கள் குறித்த ஆலோசனை இன்று நடைபெறும் எனவும் இதில் இபிஎஸ்-ஓபிஎஸ் கலந்து கொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.