சட்டப் பேரவைக்கு கருப்பு முகக்கவசம் அணிந்து வந்த அதிமுகவினர்...! காரணம் என்ன..?

சட்டப் பேரவைக்கு கருப்பு முகக்கவசம் அணிந்து வந்த அதிமுகவினர்...! காரணம் என்ன..?

எதிர் கட்சியினர் பேசும் போது நேரலை செய்வதில்லை என அதிருப்தி தெரிவித்து எதிர் கட்சியினர் கருப்பு முகக்கவசம் அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை ,கதர் மற்றும் கிராமத் தொழில் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் வனத்துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று காலை  சட்டப்பேரவைக்கு வந்த அ.தி. மு.க.வினர் கருப்பு முகக்கவசம் அணிந்து வந்தனர். எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பும் போது அதனை நேரலை செய்யாமல், இருட்டடிப்பு செய்யப்படுவதாக கூறி அ.தி. மு.க.வினர் நேற்று அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர். 

இந்நிலையில், எதிர் கட்சிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரிக்கும், ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும், சட்டப்பேரவையில், பிரதான எதிர் கட்சிகள் மக்கள் பிரச்சனையை எழுப்பும் போது, நேரடி ஒளிபரப்பை வழங்காமல் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் போக்கைக் கண்டித்தும் கருப்பு முகக்கவசம் அணிந்து வந்ததாக எதிர் கட்சியினர் தெரிவித்தனர். இதனால் அவையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

இதையும் படிக்க:சட்டப் பேரவையில் இன்றைய நிகழ்வுகள்...!!