நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை அதிமுக ஆதரிக்கும்- இ.பி.எஸ்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை அதிமுக ஆதரிக்கும்- இ.பி.எஸ்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதத்தை தொடர்ந்து, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இ.பி.எஸ்., வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் அளித்த நபரை படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் உரையின் போது முதலமைச்சரிடம் நீட் தேர்வு குறித்து கேட்டதற்கு, அவர் மழுப்பலான பதில் அளித்ததாகக் கூறிய இ.பி.எஸ்., நீட் தேர்வை ரத்து செய்யாததால், மாணவர் தனுஷின் தற்கொலைக்கு திமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.இவற்றை அவையில் பதிவு செய்த நிலையில், உரிய பதில் கிடைக்காததால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு அதிமுக துணை நிற்கும் எனவும், அதன்படி, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை அதிமுக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.