எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்....முன்னாள் அமைச்சர் பொன்னையன் உறுதி...!

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும்  நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்....முன்னாள் அமைச்சர்  பொன்னையன் உறுதி...!

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் மூத்த உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறுகையில்,

சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்த அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது என்றூம் ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும், அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார்.

மேலும் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின் படி நடைபெறும் என்றூம் இபிஎஸ்-ம்-ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர். என கூறினார். மேலும் அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவு என்றும், அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.  

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது என்றார். சாலையில் செல்லும் பலர் அதிமுக கொடியை பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் பயன்படுத்துகிறார் என சாடினார்.