அதிமுக திருப்புமுனையை உருவாக்குவது உறுதி...செங்கோட்டையன் பேச்சு!

அதிமுக திருப்புமுனையை உருவாக்குவது உறுதி...செங்கோட்டையன் பேச்சு!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பெரியார் நகரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம் :

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பெரியார் நகரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கே.வி . ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதையும் படிக்க : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!

திருப்பு முனையை உருவாக்கும் :

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் நினைத்த எந்த பணிகளும் ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியவில்லை என கூறினார். தொடர்ந்து, மக்கள் மனம் மாறி இருப்பதால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஒரு திருப்புமுனையை உருவாக்கும் எனவும் அவர், நம்பிக்கை தெரிவித்தார்.