தமிழ்நாட்டில் கோலாகலமாக நடைபெறும் ஆடி திருவிழா...!

தமிழ்நாட்டில் கோலாகலமாக நடைபெறும் ஆடி திருவிழா...!

கிருஷ்ணகிாி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே எல்லையம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

அரசம்பட்டியில் அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கபட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனா். 

இதையும் படிக்க : இந்தியா - இலங்கை தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அறிக்கை...!

இதேபோல் கடலூர் மாவட்டம் உடையார்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் பிரம்ம உற்சவ விழா விமா்சையாக நடைபெற்று வந்தது. அதனை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இன்று மாலை பக்தா்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி விமா்சையாக நடைபெறவுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சிவசுப்பிரமணியர் கோயிலில் பதினெட்டாம் பட்டம் மற்றும் 19-ம் பட்ட குரு பூஜை விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீமத் சிவஞான பாலய இருபதாம் பட்டம் குரு மகா சன்னிதானம் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

இதேபோல் திருவண்ணாமலையில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தாிசனம் செய்தனா்.