நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன கொடியேற்றம்...
உலக புகழ்பெற்ற சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத தில்லை நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவ மஹோத்சவ திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத தில்லை நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவ மஹோத்சவ திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது.
தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கின் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அந்த வகையில், ஆனி திருமஞ்சன உற்சவ மஹோத்சவ திருவிழாவின் முக்கிய கொடியேற்றம் இன்று காலை சுமார் 7:40 மணி அளவில் சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள் கொடியேற்றினார். கொரோனா 2-வது அலையின் பெருந்தொற்றின் பாதிப்பு பரவாமல் இருக்க பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் கோபுரத்திற்கு வெளியில் இருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இன்று காலை முதல் சிதம்பரம் கீழ ரதவீதி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சிதம்பரம் நகராட்சி சார்பில் கீழ வீதி முழுவதும் இயந்திரம் வாகனம் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.