கூட்டுறவுத்துறை அறிவிப்புகள், நகைக்கடன் முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை

கூட்டுறவுத்துறை அறிவிப்புகள், நகைக்கடன் முறைகேடு,  காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

கூட்டுறவுத்துறை அறிவிப்புகள், நகைக்கடன் முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, செயலாளர் நசிமுதின் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்..அதன் படி, ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது..இந்த நிலையில், நகைக்கடன் முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..

மேலும், கூட்டுறவு சங்கங்கள் நியமனங்களில் நடைப்பெற்ற முறைகேடு தொடர்பாகவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி சேலை கொள்முதல் குறித்தும் முதலமைச்சரிடன் ஆலோசித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவது தொடர்பாகவும் முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது