9 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைபொழிவு பதிவு...!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ஒன்பது மாவட்டங்களில் இயல்பான அளவை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நல்ல மழைப்பொழிவு இருந்து வருகிறது. அநத வகையில், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், தேனி, நெல்லை, திருப்பூர், ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகிய 9  மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு மழை பெய்துள்ளது.

இதையும் படிக்க : புதிய பயனாளிகளாக 7 லட்சம் பேர் தேர்வு - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும், மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை இயல்பை விட குறைவான அளவு மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோவையில் இயல்பை விட 39 சதவீதமும், ஈரோட்டில் 33 சதவீதமும், கன்னியாகுமரியில்  இயல்பை விட 98 சதவீதம் அதிகமாகவும் மழை பொழிந்துள்ளது.