டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை...நிர்வாகம் எச்சரிக்கை!!!

டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை...நிர்வாகம் எச்சரிக்கை!!!

ஆய்வின்போது கடைகளில் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை என டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (டாஸ்மாக்) என்பது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும், இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மதுபானங்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. வருவாயில் நிலையான வளர்ச்சியானது சில்லறை விலையில் அவ்வப்போது அதிகரிப்பு மற்றும் மாநிலத்தில் அதிகரித்து வரும் மது அருந்துதல் ஆகியவற்றால் கணக்கிடப்படுகிறது. விஸ்கி, ரம், ஒயின், பிராந்தி மற்றும் வோட்கா போன்ற கடின மதுபானங்கள் விற்பனையில் 80% மற்றும் பீர் மீதமுள்ள 20% ஆகும் 2011ல் 18,081 கோடியாக இருந்த வருவாய், 2019ல் ₹31,157 கோடியாக ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில், தமிழக அரசு மது விற்பனை மூலம் ₹36,013.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை விட ₹2,201.99 கோடி அதிகமாகும். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களுக்கு பதிலாக வெளிநபர்கள் பணியாற்றுவதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது.

டாஸ்மாக் கடை பணியாளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டமோ அல்லது போராட்டத்திலோ கலந்து கொள்ள செல்வதால் கடைகளில் பணியாளர்கள் இல்லை என்ற புகார் வருகிறது .டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு அல்லது வங்கி பணிகளுக்கோ செல்லும் போது உரிய அனுமதி பெற்று பணியாளர்கள் செல்ல வேண்டும் .டாஸ்மாக் நிறுவனத்திற்கோ, டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com