
சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள்
இந்தியா முழுவதும் வரும் திங்கட்கிழமை அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியையொட்டி பிற மாவட்டங்களையும், மாநிலங்களையும் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
சுங்கச்சாவடியை கடந்த 26 ஆயிரம் வாகனங்கள்
தீபாவளியை கொண்டாட வாகனங்களில் சென்னையிலிருந்து சாரை சாரையாக சொந்த ஊருக்கு சென்ற மக்கள். ஒரே நாளில் விக்கிரவண்டி, விழுப்புரம் சுங்கச்சாவடியை 26 ஆயிரம் வாகனங்கள் கடந்ததாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்.
மேலும் படிக்க: தீபாவளிக்கான இந்திய ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்..!
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்ல பேருந்து கட்டணம் ரூ.2000 முதல் ரூ.3000 வரையில் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் நடவடிக்கை பாயும் அமைச்சர் எச்சரிக்கை
தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுத்தாக வந்த புகாரின் பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அமைச்சர் எச்சரித்தார்.