முதல்வரை சந்தித்த நடிகர் சூர்யாவின் தம்பி!

மத்திய அரசு  கொண்டு வரும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா திரைதுறையினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நடிகர் கார்த்தி  தெரிவித்துள்ளார்.

முதல்வரை சந்தித்த நடிகர் சூர்யாவின் தம்பி!

மத்திய அரசு  கொண்டு வரும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா திரைதுறையினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நடிகர் கார்த்தி  தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் சந்தித்து  கொரிக்கை மனு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்ட எந்த படத்தையும் திரும்பபெற வழிவகுக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளதாகவும், புதிதாக எடுக்கக்கூடிய படங்கள் மட்டுமல்லாமல் எடுக்கப்பட்ட படங்களுக்கும்  பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இது உள்ளதாகவும் தெரிவித்தார். கருத்து சுதந்திரத்தையும் தொழிற்பாதிப்பையும் ஏற்படுத்தும் இந்த சட்டத்தை திரும்ப பெற திரைத்துறை எடுக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக கார்த்தி தெரிவித்தார்.