சர்வதேச திரைப்பட விழா..! நடிகர் சூர்யா, நடிகை நயன்தாரா படங்கள் திரையிடத் தேர்வு  

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் சர்வதேச 24வது திரைப்பட விழாவில் திரையிட நடிகர் சூர்யா மற்றும் நடிகை நயன்தாராவின் படங்கள் தேர்வாகி உள்ளது.

ஷாங்காய் நகரில் 24-வது சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்கி வரும் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்படத் திருவிழாவில் தமிழ், சீனம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.  இதில் தமிழ் பிரிவில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று மற்றும் நடிகை நயன்தாரா தயாரித்த கூழாங்கல் ஆகிய 2 படங்கள் தேர்வாகி உள்ளது. இதையடுத்து அவர்களது ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.