நடிகர் சூர்யா மன்னிப்புக் கேட்க வேண்டும்... ஜெய்பீம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்...

ஜெய்பீம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நடிகர் சூர்யா மன்னிப்புக் கேட்க வேண்டும்... ஜெய்பீம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே முதனை கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டதாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜெய்பீம் படத்தில், ஒற்றுமையாக வாழும் முதனை கிராம பொதுமக்களிடத்தில் வன்னியர் சமூகத்தை மற்ற சமூகத்தினரிடத்தில் பிரிக்கும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது முதனை பொது மக்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஜெய்பீம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், உண்மைக்குப் புறம்பான காட்சிகளை காட்சிப்படுத்திய தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா மன்னிப்புக் கேட்க வேண்டும், தயாரிப்பாளர், இயக்குநர் சங்கங்கள், தணிக்கைத் துறையினர் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வன்னியர் எதிர்ப்பு காட்சிகளை எந்த திரைப்படத்திலும் வைக்கக்கூடாது போன்றவற்றை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.