
நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவின் டிவிட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதமும் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் ரசிகர்கள் உதவியுடன் அதனை சரிசெய்ததாக குறிப்பிட் டிருந்தார். இந்தநிலையில் தற்போது அவரது கணக்கிற்குள் ஊடுறுவியுள்ள மர்ம நபர், டிவிட்டர் கணக்கு பெயரை ‘ப்ரையன்’ என மாற்றம் செய்ததோடு, முகப்பு பக்க புகைப்படத்தையும் மாற்றியுள்ளார்.
மேலும் குஷ்பு அதுவரை பதிவிட்டிருந்த டிவீட் மற்றும் போஸ்டுகளும் அழிக்கப்பட்டுள்ளன.