நடிகை விஜயலட்சுமி புகார்; இன்று காவல் நிலையத்தில் ஆஜராகிறார் சீமான்!

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாா் தொடா்பாக நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகவுள்ளாா். 

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது திரைப்பட நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகாா் அளித்தாா். அதன்படி போலீசாா் சீமான் வழக்குப்பதிவு செய்தனா். இதுத் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமியும், அவருடன் தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமியும் இணைந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையொட்டி இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. 

இதனையொட்டி, செப்டம்பா் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினா். இந்நிலையில் விஜயலட்சுமி திடீரென சீமான் மீது அளித்த புகாா் வாபஸ் பெறுவதாக தொிவித்தாா். இருப்பினும் புகாா் தொடா்பாக விசாரணை நடத்த ஆஜராக வேண்டும் என போலீசாா் தொிவித்திருந்தனா். அதன் அடிப்படையில், சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளாா். 

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா