அமர் பிரசாத் ஜாமின் மனு நவ.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாஜக கொடிக் கம்பம் அகற்றிய வழக்கில், கைது செய்யப்பட்ட அமர் பிரசாத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது. 

பனையூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்ற சென்ற ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில், அமர் பிரசாத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி சி வி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைத்தார்..