கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு...!!

கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு உரிய விதிகள் வகுக்கும் வரை தடை விதிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி  தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு...!!

பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு சமீபகாலமாக பொதுமக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து கிரிப்டோ கரன்சிகளுக்கு உரிய விதிகள் வகுக்காத நிலையில், 
ஊடகங்களில் இதுசம்பந்தமாக பெரிய அளவிலான விளம்பரங்களை வெளியிடுவதாக கூறி, அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்ச்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.


இதனை தோடர்ந்து அந்த மனுவில் முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்ததாகவும், இவ்வகையான பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிரிப்டோ கரன்சிகளை சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தகத்திற்க்கு சட்டப்பூர்வமான அங்கீராங்கள் இல்லாததால் இதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக வட்டி தருவதாக கூறி, 100 கோடி ரூபாயை மோசடி செய்த குற்றத்திற்காக கேரளாவில் நான்கு பேரை கைது செய்ததாகவும், முறைகேடுகள் அதிகளவில் நடப்பதாகவும் மனுதாரர் சுட்டிகாட்டியுள்ளார். 

எவ்வித முறைகளும் இல்லாத கிரிப்டோ கரன்சிகளை குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவின் மூலம் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார் . இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.