மீண்டும்... மீண்டுமா?? தலைவரே.. தலைவரே.. தலைவரே.. உற்சாகத்தில் உடன்பிறப்புகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

புதிய துணை பொதுச்செயலாளராக கனிமொழி,  அமைச்சர்கள் சாமிநாதன், எ.வ.வேலு ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும்... மீண்டுமா?? தலைவரே.. தலைவரே.. தலைவரே.. உற்சாகத்தில் உடன்பிறப்புகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

இன்று கூடுகிறது பிரம்மாண்ட பொதுக்குழு

திமுக பொதுக்குழு கூட்டம், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 

மீண்டும் தலைவைராகிறார் மு.க ஸ்டாலின்

மாவட்டச்செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், ஐந்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும்  ஐந்து பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய மீண்டும் திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின். இதனை உற்சாகத்துடன் உடன்பிறப்புகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சட்டவிதியில் மாற்றம் கொண்டு வரும் தலைமை

இதேபோல், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். நான்கு தணிக்கை குழு உறுப்பினர்களும், இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவிக்கான சட்டவிதியில் மாற்றம் கொண்டு வர, திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. 

ஐந்திலிருந்து ஏழாக உயரும் துணை பொதுச்செயலாளர்

இது வரையில் திமுகவில் துணை பொதுச் செயலாளருக்கான எண்ணிக்கை ஐந்தாக மட்டுமே இருந்தது. ஆனால் இம்முறை  ஐந்து துணை பொதுச்செயலாளர் எனும் பதவியை, ஏழாக உயர்த்த தலைமை திட்டமிட்டிருப்பதாகவும், இதில் புதிய துணை பொதுச்செயலாளராக கனிமொழி,  அமைச்சர்கள் சாமிநாதன், எ.வ.வேலு ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இன்றைய கூட்டத்தில் அரசியல் சார்ந்த 10க்கும் மேற்பட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.