காலை முதலே ஓயாத வெடிச்சத்தம்...மோசமடைந்தது காற்றின் தரம்...!

காலை முதலே ஓயாத வெடிச்சத்தம்...மோசமடைந்தது காற்றின் தரம்...!

தீபாவளியையொட்டி  பட்டாசு வெடித்ததில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது.

தீபாவளியால் ஏற்பட்ட காற்றுமாசு:

தீபாவளிப் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் புகை சூழ்ந்ததால் காற்றுமாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது என காற்றின் தரக் குறியீட்டின் தகவல்களின் படி தெரிய வந்துள்ளது. 200க்கும் மேல் காற்றின் தரக்குறியீடு இருப்பின் மோசமான நிலை என அறியப்படும். அந்தவகையில், ராயபுரம், அரும்பாக்கம், வேளச்சேரி, மணலி, ஆலந்தூர், எண்ணூர் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிப்பால் காற்றின் தரக்குறியீடு 200க்கும் மேல் பதிவாகி மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது.  

இதையும் படிக்க: மருது பாண்டியர்கள் வீர வரலாற்றை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும்-இளஞ்சென்னியன்!

குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்:

இந்தநிலையில் இன்று காலை முதல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தேங்கிக்கிடந்த பட்டாசு கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சியில் தினசரி கிட்டத்தட்ட 5,200 டன் குப்பை சேகரிக்கப்படும் நிலையில், தீபாவளியன்று குப்பையின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளதால் அவற்றை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.