இரவிலும் அலெக்ஸ் பாண்டியன் அட்ராசிட்டீஸ் ?!! சிறப்பு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?!!

இரவிலும் அலெக்ஸ் பாண்டியன் அட்ராசிட்டீஸ் ?!!  சிறப்பு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?!!

சென்னையில் இரவு நேரங்களில் தேநீர், திண்பண்டங்கள் விற்போரிடம் உணவுப்பொருட்களையும் பணத்தையும் போலீசார் மிரட்டிப் பிடுங்குவது வாடிக்கையாகி வருகிறது.

பகலானால் சிங்கம் சூர்யா போலவும் இரவானால் மருதமல வடிவேலு போலவும் நடந்து கொள்ளும் "சிறப்பு காவல்துறையினர்" குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்..

இரவில் பணிபுரிவோருக்கும், நள்ளிரவில் சொந்த ஊர்களில் இருந்து திரும்புவோருக்கும் ஏதுவாக ஆங்காங்கே இருசக்கர வாகனங்ஙகளில் தேநீர், திண்பண்டங்கள் உள்ளிட்டவை சென்னையில் விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிகமாக இவை காணப்படும். 

பெரும்பான்மையாக பகலில் விற்கப்படும் அதே விலையில்தான் இரவிலும் பொருட்கள் விற்கப்படும். இதனால் மக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் இரவில் தொல்லை அதிகம் என்பது வியாபாரிகளின் கவலை..  

அன்பாகப் பேசி சிரித்து மழுப்பியே ஓசியில் பொருட்களை வாங்கிச் செல்வதை பல போலீசார் வாடிக்கையாக வைத்துள்ளனர். அது வேலைக்கு ஆகாத பட்சத்தில், அதட்டலும் அடாவடியும் மிரட்டலும் கையில் எடுக்கப்படுகிறது. 50 பேரிடம் வியாபாரம் நடத்தி சம்பாதித்த பணத்தை இதுபோன்று 5 பேர் விடிவதற்குள் 5க்கும் மேற்பட்ட முறை சென்றால் காலியாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க காவல்துறை மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதே கேள்வியாகிறது.. சிறுத்தை கார்த்தி, சிங்கம் சூர்யா போல் இல்லாவிடினும், சிரிப்பு போலீஸ் போல் காவலர்கள் நடந்துகொள்ளக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.