எல்லா புகழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கே...வைரலாகும் அமைச்சர் வீடியோ!

எல்லா புகழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கே...வைரலாகும் அமைச்சர் வீடியோ!

சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எல்லாப் புகழும்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கே கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம்  மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள கோனை ஊராட்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். 

இதையும் படிக்க : கைகும்பிட்டு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்ட இராணுவ வீரர்... !

இந்நிலையில் ஒரு பெண்மணி தங்களுக்கு வாழ்வதற்கு இடம் வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்  மனுவில் கையொப்பமிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கொடுத்தார்.

அப்போது நன்றி தெரிவித்த பெண்ணிடம், எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல் எல்லா புகழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கே என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.