North Indians தொழிலாளர்கள் வெளியேறுவதால் தமிழ்நாட்டில் தொழில்கள் முடக்கம்...!

North Indians தொழிலாளர்கள் வெளியேறுவதால் தமிழ்நாட்டில் தொழில்கள் முடக்கம்...!
Published on
Updated on
1 min read

வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் முடங்குவதாக, சிவில் இன்ஜினியரிங் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோ தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்கள் முடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவில் இன்ஜினியரிங் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன், தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஹோலி பண்டிகைக்காக 70 முதல் 90 சதவீத வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி வருவதால், கட்டுமான தொழில் மட்டுமல்லாது, அத்தனை தொழில்களும் முடங்குவதால், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com