தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ தீவிரம்....கட்டாயம் விடுப்பு வழங்கக் கோரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!! 

தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ தீவிரம்....கட்டாயம் விடுப்பு வழங்கக் கோரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!! 

தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிற நிலையில் தற்போது சென்னையிலும் தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ :

பொதுவாக மெட்ராஸ் ஐ என்பது,ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவுகின்ற ஒரு நோயாகும்.இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் என மருத்துவர்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்நோயால் சென்னையில் தினசரி 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மெட்ராஸ் ஐ பரவுதல் :

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ எனப்படும்,கண்நோய் ஆகும்.கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை வேறுஒருவர் பயன்படுத்தினால் அவருக்கும் அந்நோய் பரவக்கூடும்.

கவனமாக இருக்க வேண்டும்  :

காலநிலை மாற்றத்தால் மெட்ராஸ் ஐ நோய் அதிக அளவு பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காற்று மூலம் பரவும்.மெட்ராஸ் ஐ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ், மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்,இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது,மெட்ராஸ் ஐ 5 நாட்களில் குணமடைய கூடியதுதான் ,ஆனாலும் அலட்சியமாக இருந்தால் கண் பார்வை இழக்க நேரிடும் என கூறியுள்ளார்.

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டியது :

1) ஒருவர் பயன்படுத்திய கைக்குட்டைக்களை வேறுஒருவர் பயன்படுத்த கூடாது.

2) பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றி,மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு தான் புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும்.

3) கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் 

4) தொற்றுப் பரவாமல் இருப்பதை தடுக்க, தங்களது பொருட்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

5) இந்நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது.

6) அலட்சியமாக இல்லாமல் நோய் சிறியதாக உள்ளபோதே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

7) தொற்றுள்ள நோயாளிகள்,அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு : 

நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களே அதிகம் என்பதால் மெட்ராஸ் ஐ பாதிப்புடன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கும் மெட்ராஸ் ஐ அறிகுறி இருந்தால் கட்டாய விடுப்பு எடுத்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.போதிய மருத்துவ வசதி இல்லததால்,மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

---ஸ்வாதிஸ்ரீ