பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்பு- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான திமுகவின் சட்ட போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்பு-  அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
Published on
Updated on
1 min read

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான திமுகவின் சட்ட போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் தனியார் உடற்பயற்சி கூடத்தை திறந்து வைத்த பின் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அன்பில் மகேஷ், பாட வகுப்புகள் மட்டும் இல்லாமல் மாணவர்களும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி திறப்பது குறித்து அறிக்கையை நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என்றார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான திமுகவின் சட்ட போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் மற்றும் நீட் தேர்வு வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்று கூறினார். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை தமிழகத்தில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது.  நீட் நுழைவு தேர்வு விலக்கு கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளுடன் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தினை நடத்துவார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com