காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாடு காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு 60 கோடியே 12  லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தின் எதிரொலியாக, தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலத்தில் செயல்படும் தீவிரவாத தடுப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதையும் படிக்க : 10-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை...!

முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய 4 நகரங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 4 காவல் கண்காணிப்பாளர்கள், 13 துணை கண்காணிப்பாளர்கள் என சுமார் 350 போலீசார் இந்த பிரிவில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்ந்து, தமிழ்நாடு காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு 60 கோடியே 12  லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.