காலியாக உள்ள மருத்துவ இடங்களை வழங்க கோரி தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம்..!

காலியாக உள்ள மருத்துவ இடங்களை வழங்க கோரி தேசிய மருத்துவ ஆணையத்திற்கு  கடிதம்..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 83 அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை மருத்துவ இடங்களை திரும்ப வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ்  இந்த ஆண்டும் இளநிலை  மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 6 எம் பி பி எஸ் இடங்கள் நிரப்பப்படாமல் வீணான நிலையில் இந்த ஆண்டு 83 இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதைத் தடுக்க நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ இடங்களை மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்குமாறும் தேசிய மருத்துவத் தேர்வு ஆணையத்திற்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   |வங்கியில் திடீரென ஒலித்த எச்சரிக்கை அலாரம்.! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!