போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடிய ஆம்புலன்ஸ்...அபாயக்கட்டத்துக்கு சென்ற நோயாளி!

சாலைப் போக்குவரத்து நெரிசலால் நோயாளியை ஏற்றிய ஆம்புலன்ஸ் நகர முடியாமல் திக்குமுக்காடியுள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள ஓ.எம்.ஆர். பிரதான சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதியடைந்து வருகின்றனர். 

இதையும் படிக்க : இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சிறப்புத் தீர்மானம்...வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

இந்நிலையில் இன்று விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் ஆம்புலன்ஸ் நகர முடியாமல் திக்குமுக்காடியதால் நோயாளி அபாய கட்டத்துக்கு சென்றார். பொதுமக்கள் வாகனங்களை அப்புறப்படுத்தியும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நின்றதால் வந்த வழியே திரும்பி சென்றது. 

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுபோன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடப்பதால் விரைவில் சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.