தமிழ்நாட்டின் பாரம்பரியம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது... இந்தியாவில் விவசாயம் செய்யும் நோக்குடன் அமெரிக்க தம்பதிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம்

தமிழ்நாட்டின் பாரம்பரியம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது... இந்தியாவில் விவசாயம் செய்யும் நோக்குடன் அமெரிக்க தம்பதிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம்

தமிழ்நாட்டின் பாரம்பரியம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது... இந்தியாவில் விவசாயம் செய்யும் நோக்குடன் அமெரிக்க தம்பதிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம்..!


இந்திய குடிமக்களாக விரும்பும் அமெரிக்க தம்பதி

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த தம்பதிகள் ஜிம் பிளாகஸ்லி- டெப்பி. இவர்கள் இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், அமெரிக்காவில் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். தற்போது இந்திய குடிமக்களாக மாறி இந்தியாவில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடையே எழுந்துள்ளது.

விவசாயிகளாக மாறிய ஜிம் - டெப்பி

இது தொடர்பாக ஜிம் கூறுகையில்  அமெரிக்காவை சேர்ந்த நான் 20 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்தில் வேலை பார்த்தேன். மனைவி டெப்பி, அமெரிக்க விமானப்படையில் வேலை பார்த்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறோம். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் விவசாயத் தொழில் செய்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

இந்தியாவின் மீது ஆர்வம்

இந்தியாவை நீண்ட நாட்களாக சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு உண்டு. இந்தியாவை சேர்ந்த ரவி என்பவருடன் அமெரிக்காவில் நட்பு ஏற்பட்டது. அவர் மூலம் யோகா பயிற்சிகள் தெரிந்து கொண்டோம் மற்றும் ஆழியார் அறிவு திருக்கோவில் குறித்து அவர் தெரிவித்துள்ளார். ரவியின் ஊக்கம் காரணமாக இந்தியாவின் கலாச்சாரம் நாகரீகம் பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ள தற்போது வந்துள்ளோம். 

மேலும் வாசிக்க: புதிய கட்சியா..!!!கட்சி தொண்டனா...!!!என்ன செய்ய போகிறார் கெலாட்!!

வனம் இந்தியா பவுண்டேஷன்

ரவியின் மூலம் பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், துரைசாமி ஆகியோர் நட்பு கிடைத்தது. பசுமையை மேம்படுத்தும் வனம் அமைப்பின் நடவடிக்கைகளை கண்டு வியப்படைந்தோம். இங்குள்ள விவசாய தொழில் எங்களை மிகவும் ஈர்த்துள்ளது. 

வனம் அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், அமெரிக்க தம்பதிகளை தனது இல்லத்திலேயே தங்க வைத்து உபசரித்தார். மேலும், வனம் பராமரிப்பு, தென்னிரா தயாரிப்பு, மற்றும் கால்நடைகள் வளர்ப்பு குறித்து தம்பதிகள் நேரில் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.

அமெரிக்க தம்பதிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம்

கோவை திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் மிகவும் மரியாதையாகவும் நட்புடனும் நடந்து கொள்கின்றனர். இந்தியாவில் குடியேறி இந்திய குடிமகனாக இங்கு விவசாய தொழில் செய்ய ஆர்வம் உள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர். இருவரும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடைகளில் இருந்ததுடன் இது தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.