வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 8 வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம்...

படப்பை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 8 வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம்...

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாரி ஜெயா தம்பதி. இவர்களது மகள் லதா வயது (08) அருகில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து லதா மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் லதா சிக்கிக்கொண்டார்.

 சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய சிறுமியை மீட்டு உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் சிறுமியை பரிசோதித்ததில் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.